லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் செக் குடியரசின் பிளாஸ்கோவாவை எதிர்த்து விளையாடிய ஆஷ்லி பார்ட்டி, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றினார்.