சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில்  5ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில்,  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முக்கிய கோவில்களில் ஆய்வு செய்து வருகிறார். அப்போது கோவிலில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து, கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகளை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், அவை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் கடந்த 5 ஆண்டுகளாக தற்காலிக பணியில் இருந்தவர்கள்  பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறியவர், கொரோனாவில் இருந்து தமிழகம் விடுபட்டு நலம் பெற இறைவனை வேண்டுவோம் என்றார்.