நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கோஸ்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

குலேபகாவலி , ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இப்படத்தை இயக்குகிறார்.

பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையமைக்கும் கோஸ்டி திரைப்படத்துக்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகர் யோகிபாபு, இயக்குனர் K.S.ரவிக்குமார், நடிகர்கள் சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆடுகளம் நரேன், அஜய் ரத்தினம், மனோபாலா, சுரேஷ் மேனன், சந்தானபாரதி, மயில்சாமி உள்ளிட்டோருடன் இணைந்து நடிகை ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் ப்ரோமோ பாடல் படப்பிடிப்புடன் நேற்று படப்பிடிப்பை முடித்துள்ளனர் .