‘திருச்சி: தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரத்தாக்குதலால் பெற்றோர்கள் இறந்துவிட்டதால், இதுவரை 3,686 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளது என்றும், கொரோனா காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது என்றும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பதவி உள்ள கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், உருமாறிய நிலையில் பரவி வருகிறது. இந்த பெருந்தொற்றின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 40லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவிலும், 4 லட்சம்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது. தொற்றின் தாக்கதால் பல பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதால் லட்சகக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,
தமிழ்நாடு முழுவதும், கொரோனாவினால் தாய்-தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93 பேர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும்,. பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,593. மேலும் கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதுபோல, கொரோனா காலக்கட்டத்தில் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.