டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 817 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும்   கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,892 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,07,09,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 817  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,05,028 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 44,291 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,98,43,825 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,60,704 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும்  இதுவரை 36,48,47,549 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.