திருவாரூர்:  திருவாரூர் அரசு மருத்துவமனையில் பேறுகால அவரச சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வந்த, ஒருங்கிணைந்த பேறுகால அவரச சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.  அத்துடன் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின்  முதல் முறையாக மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார்.  நேற்று மாலை 4 மணிக்கு காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின், கருணாநிதி அருங்காட்சியக கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். இரவு அங்குள்ள விருந்தினர் விடுதியில் ஓய்வுஎடுத்து.

இன்று காலை, திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி மதிப்பிலான  250 படுக்கை வசதிகளுடன் தாய் சேய் நல மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டித்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்குள்ள தாய் – சேய் சிறப்பு பிரிவின் புதிய கட்டிடம், 4 அறுவை சிகிச்சை மையம்,   மகப்பேறு குழந்தைகள் சிகிச்சைக்கான சிறப்பு தீவிர சிகிச்சை மையம் உள்பட அனைத்தையுத் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளைக்கு புறப்பட்டு செல்லும் முதல்வர் ஸ்டாலின் திருக்குவளையில், கருணாநிதி இல்லத்தில் உள்ள முத்துவேலர் நூலகம், அஞ்சுகத்தம்மாள் படிப்பகத்துக்கு சென்று அங்குள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று அங்கிருந்து காரில் புதுச்சேரி வழியாக சென்னை திரும்புகிறார்.