சென்னை

நேற்று தமிழகத்தில் 66,679 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது..  விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றாக மாநிலம் எங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   தமிழக அரசு சார்பில் பல கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இதற்கான தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.

கொரோனா தடுப்பூசி மருந்து பற்றாக்குறை அதிகமாக உள்ளது.  எனவே இன்று சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.  நேற்று தமிழகத்தில் 66,679 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 1,57,41,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.