சென்னை

சென்னையில் இன்று மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

மத்திய அரசு சர்வதேசச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.  இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் குறைந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் குறை கூறி வருகின்றன.   இந்த விலை உயர்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதால் மக்கள் கடும் துயருக்குள்ளாகி இருக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டிய நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்ட்ருக்கு ரூ.100.13 எனவும் டீசல் லிட்டருக்கு ரூ. 93.72க்கும் விற்பனை ஆனது.  இன்று பெட்ரோல் விலை லிடருக்கு 31 காசுகளும் டீசல் விலை 19 காசுகளும் மேலும் அதிகரித்துள்ளன.

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.44 என விற்கப்படுகிறது.  இதைப் போல் சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.93.91 என விற்பனை செய்யப்படுகிறது.