மதுரை: ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் ஆம்புலன்ஸ் சிறப்பான பணி செய்து வருகிறது. இருந்தாலும் பல கிராமங்களில் ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில் தாமதமும் சிரமமும் உள்ளது. இதனால், பல நோயாளிகளின் உயிர்கள் மருத்துவ வசதியின்றி பலியாகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை, தமிழகத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.