ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலும் கல்வியாண்டு இறுதியில் குழுவாக வெளியே சென்ற மாணவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
4.7 கோடி பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு கடந்த சிலநாட்களாக அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் பலருக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலவரப்படி, கடந்த ஒருவாரத்தில் ஒரு லட்சம் பேரில் 117.7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது, இது முந்தைய வாரத்தில் 92,57 ஆக இருந்தது.
12 முதல் 19 வயதுள்ளவர்கள் 287.8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது முந்தைய நாளை விட 44 அதிகம், 20 முதல் 29 வயதுள்ளவர்கள் 293.3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது 42 அதிகரித்துள்ளது.
30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாகவும், அதுவரை கொரோனா பரவல் விவகாரத்தில் எந்தவித தளர்வுகளையும் வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.