மும்பை

னி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவை தேர்தலை சிவசேனா கட்சி சந்தித்தது.    இந்த கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி குறித்த சிக்கலால் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டது.  மேலும் அக்கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இனி பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.  ஆயினும் சிவசேனா தலைவர்  தாக்கரே குடும்பத்திற்கு பிரதமருடனான உறவு மரியாதைக்குரியது மற்றும் அன்பு நிறைந்தது. மோடி நாட்டின் பிரதமர். எங்களுக்கு அவருடன் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.

நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம் என்பதற்காக அவர் எங்களது எதிரி என்றாகிவிடாது. மோடிர் நாட்டின் தலைவர். எனவே மகாராஷ்டிராவுக்கு அவர் தேவை. மாநிலம் இக்கட்டான நிலையிலிருக்கும்போது அவர் உதவுவார்.   சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி) கூட்டணி 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவுசெய்யவே அமைக்கப்பட்டது. நாங்கள் அதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

நாங்கள் மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்து அது இரண்டு ஆண்டுகள் நிறைவுசெய்துவிட்டது. இது 10 நாள்களில் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி பேசி வந்தது. ஆயினும் இந்தக் கூட்டணி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நிச்சயம் மேலும் 3 ஆண்டுக்கால ஆட்சியையும் நிறைவு செய்யும். எனக் கூறி உள்ளார்.