ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கி வருகின்றன.
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,62,90 பேர் புதியதாக பாதிக்ப்பட்டு உள்ளதுடன், இதுவரை 18,29,60,893 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை 39,62,357 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுபோல தொற்றில் இருந்து 16,75,43,393 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும் தொடர்ந்து வருகிறது.