இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதையும் மீறி எப்படிச் சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம் என்று கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள், கஸ்தூரியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், “அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மனக் கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் ‘தலைவரை’ வரவேற்கத் தயாராகட்டும் தமிழகம்!” என்று பதிவு செய்தார் கஸ்தூரி.

இதனை தொடர்ந்து ரஜினி தரப்பிலிருந்து கஸ்தூரிக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகளை வெளிவந்தது.

தற்போது இது தொடர்பாக ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ், கஸ்தூரியின் பதிவைக் குறிப்பிட்டு, “தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை. எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பதுதான் நிஜம்” என்று

தெரிவித்துள்ளார்.