சென்னை

பாஜகவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி  செய்ததாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வந்த ராமமூர்த்தி என்பவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார்.   இவருக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு தொழிலில் ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டது.  இவருக்கு கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரி செய்யக் கமலக்கண்ணனிடம் ராமமூர்த்தி ரூ.10 கோடி கடன் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார்.  தாம் கடன் வாங்கித் தருவதாகக் கூறிய கமலக்கண்ணன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர் கே சுரேஷை ராமமூர்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தார்.   ஆர் கே சுரேஷ் கடன் வாங்கித் தருவதாக உறுதி அளித்தார்.

இதற்காக ராமமூர்த்தியிடம் இருந்து ஆர் கே சுரேஷ் ரூ.1 கோடி வாங்கியதாகக் கூறப்படுகிறது.  ஆயினும் ராமமூர்த்திக்கு கடன் கிடைக்கவில்லை.    இந்நிலையில் ராமமூர்த்தி மரணம் அடைந்துள்ளார்.  அவரது மனைவி வீணாவுக்கு கமலக்கணான் இது போல் பலரிடம் மோசடி செய்துள்ளதாகக் கைது செய்யப்பட்டார்.   

ஆயினும் ஆர் கே சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால் அவரை கைது செய்யவில்லை  எனவும் கூறப்படுகிறது.  இதையொட்டி வீணா தாம் பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து நேரடியாகக் காவல் ஆணையர் அலுவலகத்திலும் முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.