சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பும்,  98 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாடு அரசின்  நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று புதிதாக  4,804 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,70,678 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 291 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,44,445 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,742 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,26,195 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,062 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 37 பேரும், அரசு மருத்துவமனையில் 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று  6,553 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,97,336 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,895 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,25,15,205 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது கொரோனா வார்டில் 40,954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 271 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இவர்களில் அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 202.

[youtube-feed feed=1]