சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை செய்த நீதிபதிகள், தடுப்பூசி முகாம் நடத்தும் பொழுது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து தடுப்பூசி முகாமுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel