சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என  மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்தியஅரசிடம் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல தமிழகஅரசு நேரடியாகவும் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,41,50,249 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தமிழகஅரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தல்,  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமஎன்று வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையைவிட அதிக தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையைவிட குறைவான தடுப்பூசிகளே இருக்கின்றன. எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு 90%, தனியார் மருத்துவமனைகளுக்கு 10% என்ற விகிதத்தில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

[youtube-feed feed=1]