new 1
நாகர்கோவில்:
திமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரு இடங்களில் போட்டியிட்டது, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அதிமுகவி்ன் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் சரத்குமார் ஏற்றுக்கொண்டார்.
அவரும், அரது கட்சியின் துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணனும் வெற்றிபெற்றார்கள். வெற்றி பெற்றதில் இருந்து அ.தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்துவந்தார் சரத்குமார்.
பலமுறை ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டும், தொடர்ந்து அவரது ஆதரவாளராகவே வலம் வந்தார். சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் விவகாரத்தில், அப்போதைய நடிகர் சங்க தலைவரான சரத்குமார் சரியாக செயல்படவில்லை என்று சட்டசபையிலேயே ஜெயலலிதா அறிவித்தார். அப்போது சபையில் இருந்த சரத்குமார் மவுனம் காத்தார். அதோடு, தொடர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்தே வந்தார்.
கிட்டதட்ட அனைத்து தரப்பினரும் அ.தி.மு.க. வை விமர்சித்த வெள்ள சேத நேரத்திலும் தமிழக அரசை பாராட்டினார் சரத்குமார். ஆனால் அவரை அ.தி.மு.க. தரப்பில் பொருட்படுத்தவே இல்லை.
முன்னதாக நடந்த நடிகர் சங்க தேர்தலின்போதே, அ.தி.மு.க. கட்சி, சரத்குமாரை கைகழுவிவிட்டது.
இதற்கிடையே சரத்குமாரின் கட்சியும் உடைந்தது. துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் உட்பட சிலர் கட்சியைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகுகிறது. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. அதிமுக என்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது. தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை” – இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.
பல்வேறு அவமானங்களுக்குப் பிறகும் அ.தி.மு.க.வை ஆதரித்து வந்தார் சரத்குமார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தனக்கு இடமில்லை என்பது உறுதியாக தெரிந்தவுடன், அக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை .