சென்னை: தமிழ்நாடு முழுவதும் திங்கட்கிழமை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கில் இருந்து மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5ந்தி காலை வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைத்தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, வரும் 28.06.2021 முதல் 50% பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் , கூடுதலாக 23 மாவட்டங்களில் என ஆகமொத்தம் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கம் நடைபெறும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

Patrikai.com official YouTube Channel