இந்திய தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும், சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியையும், இந்திய அரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனஙம் கோவாக்சின் தடுப்பூசியையும் தயாரித்துள்ளது. இவை இரண்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. மேலும் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, கோவாக்சின் தடுப்பூசி பல நாடுகளின் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்களை கைது செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தார். அதனால், அங்கு தடுப்பூசி தேவை அதிகரித்து உள்ளது. இதையடுத்து, தற்போது, இந்தியாவில் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.