அகமதாபாத்: சமுதாயத் தலைவரை அச்சுறுத்தியதற்காக பிரபல இந்தியப்பட நடிகை பயல் ரோஹத்கியை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.ங

நடிகை பாயல் ரோஹத்கி, சோசியல் மீடியாவில், சமுதாயத் தலைவர் மீது மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகம் செய்து பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பதிவு தொடர்பாக அவர் சமூக வலைதள உறுப்பினர்களுடன் பலமுறை சண்டையிட்டதுடன், அந்த சமுதாய தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை பாயல் தனது பதிவை நீக்கிவிட்டார். இருந்தாலும், பாயல் ரோஹத்கியை குஜராத்தின் அகமதாபாத்தில் சேட்டிலைட் போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி. இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் ஆவார். அவ்வப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறவர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைப்பதும் வழக்கம்.
கடந்த 2019ம் ஆண்டு நடிகை பாயல் ரோஹத்கி தனது சமூக வலைத்தள பக்கத்தில், நேரு-இந்திரா குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறான கருத்துகளையும், வீடியோவையும் பதிவிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் அவரை ராஜஸ்தான் மாநிலம் பண்டி நகர போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]