டெல்லி: நாடு முழுவதும் உயர்படிப்புக்கான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என என மத்திய அரசு  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி வரும் ஆகஸ்டில் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், உயர்படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக ஜேஇஇ தேர்வுகள் நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதற்கட்டமாகவும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2ம் கட்டவும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காரணமாக, பொறியியல் படிப்புக்கான ஜெஇஇ தேர்வும், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை எப்போதுநடத்தவது என்பது குறித்து மத்தியஅரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியஅரசின் உயர்அதிகாரி, நிலைமையை பகுப்பாய்வு செய்து வருவதாகவும்,  “JEE-Mains இன் நிலுவையில் உள்ள பதிப்புகளின் அட்டவணை மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி NEET-UG ஐ நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது  என்று ஒரு மூத்த அதிகாரி  ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.

ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]