இந்த ஊரடங்கு காலத்தில் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் வசித்து வருகிறார்.
உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை செலவழித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தற்போது அவரின் ஓவியங்களுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சாந்தானுவின் ஓவியங்களுக்கு இடையே அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் ஸ்ருதி ஹாசன் நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கும் சொர்க்கம், எங்கள் கனவுகள் அனைத்தையும் வைத்திருக்க எண்ணும் உலகம், வண்ணங்களின் வழியே சொட்டுகிறது. வளையல்களில் மூடப்படுகிறது. செல்ல ப்பிராணிகளின் கால்களால் உருவான வண்ணம், ஒரு சிறிய வீட்டை உருவாக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.