தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ?
– சங்கர் வேணுகோபால்
உலகம் முழுவதும் தன் கோர தாண்டவத்தை நிகழ்த்திய sarscovid எனும் கொரோனா பெரும் தோற்று கடந்த 16 மாதங்களாய் இந்தியாவை நிலை குலைய செய்தது. முதல் அலை இரண்டாம் அலை என்பதை அடுத்து தற்சமயம் மூன்றாம் அலையை எதிர்க்கொள்ள நாம் தள்ளப்பட்டுள்ளோம்
பல நாடுகள் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து முழுவதும் மீள வில்லை என்றாலும் நோயின் தாக்கத்தை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.
உலகின் முன்னணி நாடுகள் சராசரியாக 40% முதல் 50% மக்களை முழுவதும் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில் அவர்கள் ஓரளவு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர துவங்கிவிட்டனர்.
ஆனால் இன்று வரை இந்தியா மருத்துவ ரீதியாகவோ , பொருளாதார ரீதியாகவோ ஆட்சி ரீதியாகவோ மீண்டு வரவில்லை இந்த பெருந்தொற்று நோயினை ஓரளவு சிறப்பாக கையாண்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மாநிலமான மகாராஷ்டிரா, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா மற்றும் சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு பெரும் முயற்சியால் போராடிவரும் இந்த சமயத்தில் ஒன்றிய அரசின் ஒத்துழையாமை விபரீதமான முடிவை நோக்கி போகிறது
அறிவியலை புறந்தள்ளி மாயைகளை முன்னிறுத்தி நுனிப்புல் மேய்ந்து போலியான வெற்றிகளை கொண்டாடி முதல் அலையை தவறாக கையாண்டு இன்று அது டெல்டா (Delta ) B.1.672.2 எனும் ஒரு மரபணு மாற்று உயிர்கொல்லியாக மாற்றிய பெருமை முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசையே சாரும்
Oxford University Jenner Instituteஆராய்ச்சி January 2020 துவங்கி 2020 May மாதம் Astra Zeneca தலைமை பொறுப்பு ஏற்று May 2020இல் GAVI, CEPI, GF முதலீட்டில் Serum Instituteக்கு ஒப்பந்த உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டது Januaryஇல் WHO EUA (Emergency Usage Authorisation) வழங்கியது.
இந்த 1 வருட காலம் அவகாசம் இருந்தும் நம் நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காமல் போதிய தடுப்பூசிகளை வாங்காமல் பல பொய்யான தகவல்களை தனது விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிய முழு முதல் காரணமாக அமைந்தது மோடியின் தவறான அனுகுமறைகளே.
2021ஆம் ஆண்டு February மாதம் budget தாக்கீட்டில் 35 ஆயிரம் கோடி தடுப்பூசிக்கு ஒதுக்குவதாக அறிவித்த நிலையில் அந்த பணம் 175 கோடி தடுப்பூசிகளை வாங்கியிருக்க கூடும் தற்போதைய சந்தை விலையில் அந்த 175 கோடி தடுப்பூசியை கொண்டு ஏறக்குறைய 80% இந்தியர்களுக்கு இரண்டு தடுப்பூசி தவணையும் செலுத்தியிருக்க முடியும்.
ஆனால் சென்ற மாதம் மாநிலங்கள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தாங்களே வாங்க வேண்டும் என்றும் தடுப்பூசியின் விலையை மூன்று கட்டாக நிர்ணயம் செய்து பல குழப்பங்களை ஏற்படுத்திய ஒன்றிய அரசு பிறகு உச்சநீதி மன்ற தலையீடு வருமோ என்ற அச்சத்தில் மீண்டும் தானே தடுப்பூசி வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் இன்றைய தேதி வரை நடைப்பெற்ற நடவடிக்கைகள் பார்க்கும் பொழுது இந்தியர்கள் அனைவரும் தடுப்பூசி பெறுவது என்பது ஒரு இயலாத இலக்காகவே தெரிகிறது
உலகத்தின் தடுப்பூசி உற்பத்தி நாடு என்று பெயர் எடுத்த இந்தியாவில் தடுப்பூசி ஒப்புதல் பெற்ற இந்த 6 மாதங்களில் சற்றேறக்குறைய 3% மக்களுக்கு தான் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது வெட்கமும் வேதனையும் நிறைந்த ஒரு அடையாளமாகவே உள்ளது.
லண்டன் சென்று தஞ்சம் அடைந்துள்ள சீரம் நிர்வாக இயக்குனர் அடார் பூனவாலா நிறுவனம் மூலம் மற்றும் USFDA ஒப்புதல் இன்று வரை பெற தவறிய Bharat Biotech மூலம் நாம் வரும் மாதங்களில் பெற போகும் தடுப்பூசிகளின் கையிருப்பு திட்டமிடல் என்று அணைத்து வகையிலும் ஒரு இருண்ட பாதையே தெரிகிறது
உலகத்தின் 60% தடுப்பூசி உற்பத்தி பெற்றுள்ள இந்தியாவிற்கு ஏன் இப்படி ஒரு ஆபத்தான நிலை ஏறப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டிருப்பது தெரிகிறது
மக்கள் உயிரை அடமானம் வைத்து நம் நாட்டில் தயாரான மருந்துகள் நம் பயன்பாட்டிற்கு இல்லாமல் வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் WHO பங்கீடும் அந்த நாடுகளுக்கு போகாமல் தேவையற்ற நாடுகளுக்கு தடுப்பூசி சாதுர்யம் என்ற பெயரில் பதுக்கப்பட்டிருக்குமோ என்ற பெரும் சந்தேகத்தை ஏற்பதுகிறது
பண மதிப்பிழப்பின் பொது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் Organized Loot & Legalised Plunder என்று சொன்னது போல் இதுவும் ஒரு திட்டமிட்ட ஊழல் போலவே தெரிகிறது
இதன் முழு உண்மை வெளிவர இங்கே சில தரவுகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்
இந்த தரவுகள் பல கோப்புகள் செய்தி வெளியீடுகள் இணையதள பதிவுகள் மூலம் சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு செய்தி தொடராக வருகிறது
இந்த செய்தியின் தன்மை கருதியும் தரவுகளின் நீட்சி கருதியும் இந்த செய்தி 4 தொகுப்புகளாக வெளிவரும்
தொடர்புடைய செய்தி :
தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2
தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3
தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4
Write-up, Data Research & Fact checking By: Shankar Venugopal