வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தால், படக்குழுவினர் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர்.

இதனிடையே மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரசிகர்கள் மீண்டும் பாடல் குறித்து கேட்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

இதனிடையே மாநாடு திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடியான ஐந்து அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு திரைப்படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் OTT யில் வெளியாகாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 21ஆம் தேதி மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக பாடல் வெளியீட்டுக்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் இணைய உள்ளனர். மாநாடு திரைப்படத்தின் டிரைலர் பக்ரீத் தினத்தன்று வெளியாகும் என்றும் படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது ஆயுத பூஜை நாட்களில் வெளியாகலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து மாநாடு திரைப்படத்தின் டப்பிங்கில் பணியாற்றிவரும் நடிகர் உதயா பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் “வேற லெவல் காட்சிகள்! மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. திரைப்படத்தை காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை .நடிகர் சிலம்பரசன் அசத்திவிட்டார் .வாவ் எஸ்.ஜே.சூர்யா சார். நண்பர் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு நன்றி நீங்கள் இன்னும் அசத்த போகிறீர்கள் முதலாளி சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்து டப்பிங்கில் ஈடுபடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் உதயா.

மாநாடு திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் இது மாதிரியான தகவல்கள் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது என சொல்லலாம்.