வாஷிங்டன்
அமெரிக்கப் பெண் செனட்டர்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற போதிலும் இந்திய மண்ணை மறக்காமல் உள்ளதாகப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

நேற்று கமலா ஹாரிஸ் தனது அதிகாரப் பூர்வ இல்லமான நாவல் அப்சர்வேடரி டிசி என்னும் வீட்டில் அமெரிக்கப் பெண் செனட்டர்களுக்கு விருந்து ஒன்றை அளித்துள்ளார். இந்த விருந்தில் அவர் சீஸ் பஃப்களை தானே சமைத்துப் பரிமாறி உள்ளார்.

Patrikai.com official YouTube Channel