சென்னை: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான துறைகளின் ஐஏஎஸ், அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இன்று பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்…

  1. ஜான் லூயிஸ், ஐஏஎஸ்
  2. ஏ. மெக்ராஜ், ஐஏஎஸ்
  3. கே .சங்கர், ஐஏஎஸ்
  4. பி. விஜயகார்த்திகேயன்,ஐஏஎஸ்
  5. கே.கருணாகரன், ஐஏஎஸ்
  6. எம்.ஜெயந்தி, ஐஏஎஸ்
  7. எஸ்.கர்பகம், ஐஏஎஸ்
  8. கே . சந்தோஷ் கே. மிஸ்ரா ஐஏஎஸ்
  9. பிரசாந்த் எம். வாட்னெர், ஐஏஎஸ்
  10. சுந்தரவள்ளி, ஐஏஎஸ் (டி.எம்.டி.)
  11. கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா ஐஏஎஸ்,
  12. விபு நாயர்,ஐஏஎஸ்
  13. ரவிச்சந்திரன், ஐஏஎஸ்
  14. டி.ஸ்ரவன்குமார் ஜாதவத், ஐஏஎஸ்
  15. அமிர்தா ஜோதி, ஐஏஎஸ்
  16. எஸ் .; மகேஸ்வரி, ஐஏஎஸ்
  17. பி. பழனிசாமி, ஐஏஎஸ்
  18. கே.எஸ் .; சாந்தா, ஐஏஎஸ்
  19. வி.விஜயலட்சுமி,ஐஏஎஸ்
  20. எம். ஆபிரகாம், ஐஏஎஸ்
  21. டி.மலர்விஷி, ஐஏஎஸ்
  22. எஸ்.பிரதீப் குமார்,ஐஏஎஸ்
  23. எம்.அருண் சுந்தர் தயலன் ஐஏஎஸ்
  24. ஜி.கே.சாந்தி, ஐஏஎஸ்
  25. கே.பழனிசாமி,ஐஏஎஸ்
  26. எஸ்.ராமன் ஐஏஎஸ்
  27. ஏ. ஹர் சஹாய் மீனா, ஐஏஎஸ்
  28. டி.என். ஹரிஹரன், ஐஏஎஸ்
    திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த பி.சங்கர் காதி கைவினைப் பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
    நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    தமிழ்நாடு கோ – ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக டி.பி.ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
    இதேபோல் பேரூராட்சி இயக்குனர் எஸ்.பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
    செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராராகவும்,
    கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
    மீன்வளத்துறை ஆணையராக கருணாகரனும்,
    நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தியும்,
    வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகமும்,
    போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி,
    விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம் என மொத்தம் 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிடப்பட்டிருக்கிறது.