டெல்லி: வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ல், நாடு முழுதும் ஊரடங்கு அமலானது. அப்போது, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியோர், அதற்கான தவணை செலுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, மூன்று மாதம் அவகாசம் வழங்கியது. அதன்பின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும், கடன் தவணையை செலுத்த அவகாசம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது,இ நாடு முழுவதும், கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், கடன் தவணை செலுத்த, வங்கிகள் அவகாசம் வழங்கக்கோரிபொதுமக்கள், நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. நடப்பு ஆண்டிலும் கடன் தவணை செலுத்த, அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படாததால் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 3 மாத காலம் கடன் தவணைகளை வங்கிகள் தள்ளி வைத்துள்ளன. இந்நிலையில் பொது முடக்க காலம் சுமார் 2 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டதால் கடன் வாங்கியோர் நலன் கருதி, மேலும் 3 மாதங்களுக்கு தவணை வசூலிப்பதை ஒத்தி வைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்குமாறு உத்தரவிட முடியாது என்று கூறியதுடன், நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]