டெல்லி: இணைய பதிவு மட்டுமின்றி தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொற்றின் தாக்கம் சற்றே குறைந்தாலும் தினசரி பாதிப்பு 1லட்சம் அளவில் தொடர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பலன் தரும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ஆனால், நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டடுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்க மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட மோடி அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், இன்று பதிவிட்டுள்ள டிவிட்டில்,
தடுப்பூசிக்கு இணைய பதிவு போதாது, தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.’
என கூறியுள்ளார்.