புதுடெல்லி:
இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel