நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.
இதில் நாயகியாக பிரியங்கா மோகன், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் கதைப்படி முக்கியமான வில்லனாக வினய் இருப்பார் எனத் தெரிகிறது. இதர வில்லன்கள் யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றைய இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சூர்யாவின் 40வது திரைப்படம் 35 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்ட பின்னர் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாகவும் படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் வரை பொருத்திருக்கும்படியும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.