கலிபோர்னியா:
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உணவகம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட் வகையில் இந்த வணிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிரைவ்-இன் உணவகங்கள் மின்சார கார்களை சார்ஜ் செய்யும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் அமைவிடங்களில் அமையலாம் என தெரிகிறது.

உணவகம் அமைப்பதற்கான அனுமதி வேண்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பணம் செய்துள்ளதாம். அதில் உள்ள என்ற குறியீட்டை வைத்து தான் இந்த தொழிலை துவங்க உள்ளது டெஸ்லா என அமெரிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel