கரூர்: கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை  முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் நேற்று (மே.30) புதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3, 539ஆக அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மே மாதம் முதல் வாரத்தில் 175 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது உயர்ந்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்றளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஏற்கனவே  நோயாளிகள்  சிகிச்சைப் பெறுவதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகளில் 18 இடங்களில் 850 படுக்கைகளும், கரூரில் உள்ள 21 தனியார் மருத்துவமனைகளில் 473 படுக்கைகளும், கரோனா சிறப்பு மையத்தில் தனிமைப்படுத்தபட்ட 17 மையங்களில் 717 படுக்கை வசதிகள் என, மொத்தம் 2,040 படுக்கைகள் மட்டும் கரூர் மாவட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில், கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா  தடுப்பு மையம் அமைக்கப்ட்டது. இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த  விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி, ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கொரோனா தடுப்பு மையத்தில்,   152 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடனும் , 48 படுக்கைகள் ஆக்ஸிஜன் இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 6 மருத்துவர்கள், 1 செவிலியக் கண்காணிப்பாளர், 10 செவிலியர்கள் , 4 சுகாதாரப் பணியாளர்கள் , 4 தூய்மைப் பணியாளர்கள் , 1 மருந்தாளுநர் , மற்றும் 3 தரவு உள்ளீட்டாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் . இவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயளிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது . கூடுதலாக 7,000 லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளவுள்ள 30 உருளைகள் தயார் நிலையில் பயன்பாட்டிற்கு உள்ளது.

24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது மேலும் , ஜெனரேட்டர் வசதியும் மற்றும் குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு சித்த மருத்துவர்களால் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படும்.

நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில் உடனடியாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு நான்கு 108 அவசரகால ஊர்திகள் பயன்பாட்டிற்கு உள்ளது .நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில் உடனடியாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு நான்கு 108 அவசரகால ஊர்திகள் பயன்பாட்டிற்கு உள்ளது .

இந்நிகழ்ச்சியில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம் , சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகள் இந்த முகாமில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்