டெல்லி: கிராமங்களில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 1075 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அணுகலாம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருஐகிறது. . இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
. அதன்படி கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை அதிகரிக்க, ‘1075’ என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் தொழில்நுட்பம் மற்றும் இணையம் வசதி இல்லாத இடங்களில் ஹெல்ப்லைன் எண்ணான ‘1075’ ஐ அழைத்து, தங்கள் கோவிட் தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்யலாம். மேலும் கிராமப்புற மக்களிடையே ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சேகரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் பணியாளர்கள் மூலம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.