டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவியுள்ளதால், ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலை உலகம் முழுவதும் பரவி உள்ளது. பல நாடுகளில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இந்தியாவிலும் தொற்று பரவல் -குறையத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயணிகளின் விமானங்கள் ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்படும், ஆனால் சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறையால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என கூறி உள்ளது.