சென்னை: பள்ளிக் கல்வித்துறை பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து துறைகளும் மாற்றி யமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் என்ற பதவி ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பள்ளிக்ல்வித்துறை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இயக்குநரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது
இது கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்த கண்ணப்பன் விலகினார். இதனால், அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்து.
இந்த நிலையில், கண்ணப்பனுக்கு தற்போது புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]