டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கறிஞங்ரகள் ரீபக் கன்சால் மற்றும் கவிரவ் குமார் பன்சால் ஆகிய இரு வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். அவர்களது மனுக்களை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதி எம்.ஆர் ஷாவும் அடங்கிய 2 நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்குஉத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் குறித்து ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறும், இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் ஒரே மாதிரியான கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.