டில்லி

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று வரை 2,65,28,846 பேர் பாதிக்கப்பட்டு அதில் 2,99,296 பேர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 2,34,18,523 பேர் குணம் அடைந்து தற்போது 28,00,403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சரியான சிகிச்சை பரிந்துரைக்கப்படாத நிலையில் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமானதாகும்.  எனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதையொட்டி கொரோனா  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் நேற்று ஒரே நாளில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   இதுவரை 32,86,07,937 மாதிரிகள் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,78,231 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 2,61,25,746 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.