மும்பை: 1989ம் ஆண்டு வெளியான ‘மைனே பியர் கியா’ இந்தி படப் புகழ் பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78.
இந்தி உள்பட பல மொழி படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 வது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார். நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார்.
இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் அறிமுகப்படுத்தினார். அதனால் தாதா கோண்ட்கேவுக்காக ஆரம்பத்தில் இவர் மராத்தி பாடல்களுக்கு இசையமைத்தார். பின்னர் இந்தி பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.
1989 யில் சல்மான் கான் படமான மைனே பியர் கியா என்ற படத்தில் அமைத்த இசையின் மூலம் பெரும் புகழ் பெற்றார். இவர் ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும், ராஜ்ஸ்ரீ ப்ரோடுக்சனுடன் இணைந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றார்.
ராம் லக்ஷ்மன் இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.