சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதையொட்டி, வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக அடுத்த வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. இதையொட்டி, இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அத்துடன். மிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து மக்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 11.30 மணிக்கும் திருச்சிக்கு 11.45 மணிக்கும் நெல்லைக்கு இரவு 8 மணிக்கும் தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
