மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 29.911 மற்றும் கர்நாடகாவில் 28,869 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 29,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 54,97,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 984 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 85,355 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 47,371 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 50,26,308 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,83,253 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 28,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 23,35,524 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 468 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,854 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 52,257 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 17,76,695 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,34,954 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.