சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 900 என தமிழகஅரசு நிர்ணயம் செய்து அறிவித்து உள்ளது.

தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200–லிருந்து ரூ. 900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 800லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600லிருந்து ரூ. 400 ஆக குறைக்கப்படுகிறது.

வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.