சென்னை: கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதற்காக  தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவியுள்ளது. அதன் விவரத்துடன்,  ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின் 2வது அலையை தடுக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தொற்று  பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் (War room) அமைத்துள்ளது. அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதும், ஆக்சிஜன் வசதிகள் கிடைப்பதும், நோய்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை குறித்து அறிய தமிழக அரசால் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (War Room) உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.

 

[youtube-feed feed=1]