மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 34.031 மற்றும் கர்நாடகாவில் 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 34,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 54,67,537 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 594 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 84,371 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 51,457 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 49,78,937 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,01,695 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 34,261பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 23,06,655 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 468 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,306 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 49,651 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,24,438 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,58,890 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.