டெல்லி: வங்கக் கடலில் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் அரபிக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறியது. டவ்தே என பெயரிடப்பபட்ட அந்த புயலின் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் மழை பொழிந்தது. இறுதியில் குஜராத்தில் பயங்கர சூறாவளியுடன் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 23ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறும்த என்றும், இதற்கு ‘யாஸ்’ என பெயர் சூட்ட ஏமன் பரிந்துரை செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.