டில்லி
இந்தியாவில் நேற்று 3,10,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10580 பேர் அதிகரித்து மொத்தம் 2,46,73,065 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,090 அதிகரித்து மொத்தம் 2,70,319 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,62,367 பேர் குணமாகி இதுவரை 2,07,89,038 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 36,13,515 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 34,848 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 53,44,063 ஆகி உள்ளது நேற்று 960 பேர் உயிர் இழந்து மொத்தம் 80,512 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 59,073 பேர் குணமடைந்து மொத்தம் 47,67053 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,94,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 41,779 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,71,931 ஆகி உள்ளது இதில் நேற்று 349 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 34,425 பேர் குணமடைந்து மொத்தம் 15,44,982 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,05,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 32,680 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,18,264 ஆகி உள்ளது. இதில் நேற்று 96 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,640 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 29,442 பேர் குணமடைந்து மொத்தம் 16,66,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,45,333 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 12,513 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,09,140 ஆகி உள்ளது. நேற்று 281 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 17,238 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 28,404 பேர் குணமடைந்து மொத்தம் 14,14,259 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,77,643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 33,658 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,65,035 ஆகி உள்ளது இதில் நேற்று 303 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,905 பேர் குணமடைந்து மொத்தம் 13,39,887 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,77,643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.