சென்னை
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த மாத மற்றும் மண்டல வாரியான விவரங்கள் இதோ

சென்னையில் இதுவரை 4,25,603 பேர் பாதிக்கப்பட்டு இதில் 5,621 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,75,669 பேர் குணம் அடைந்து தற்போது 33,313 பேர் பாதிப்பில் உள்ளனர். இந்த பாதிப்பு கடந்த 1 மாதமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி அன்று தினசரி பாதிப்பு 2,105 ஆக இருந்தது. அது சிறிது சிறிதாக உயர்ந்து கடந்த மே மாதம் 10 ஆம் தேதி அன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்து 7,564 ஆக உயர்ந்தது. அதன் பிறகு மே மாதம் 11 ஆம் தேதி அன்று 6,9211 ஆகக் குறைந்து 12 ஆம் தேதி அன்று 6,538 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் தற்போதுள்ள 15 மண்டலங்களில் அதிக பட்சமாக அண்ணாநகரில் 4,598 பேர் பாதிப்பில் உள்ளனர். அடுத்ததாக அடையாறு மண்டலத்தில் 4,375 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 4,214 பேரும் பாதிப்பில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அம்பத்தூர் மண்டலத்தில் 4,095 பேரும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,746 பேர் பாதிப்பில் உள்ளனர். மணலி மண்டலத்தில் தற்போது 806 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.