சென்னை

மாவடங்களை ஒன்றிணைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதனால் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லாததால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்காகக் காத்திருக்க நேரிடுகிறது..

மேலும் எங்கு படுக்கைகள் காலியாக உள்ளன என்பது தெரியாமல் பல நோயாளிகள் அலைந்து வருகின்றனர்.   இதையொட்டி தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார் ரூம் அமைத்துள்ளது.  இங்கு மாவட்ட வாரியான மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை நோயாளிகள் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு  இந்த வார் ரூம் மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்டங்களையும் ஒன்றிணைக்கிறது என அறிவித்துள்ளது.  மேலும் மாவட்டம் வாரியாக இது குறித்து தகவல் அறிய உதவும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.