மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 46,781. மற்றும் கேரளாவில் 43,529 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 46,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 52,26,710 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 816 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 78,007 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 54,805 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 46,00,196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,46,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 43,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,10,930 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 96 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,064 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 34,600 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 15,71,738 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,32,787 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.