சென்னை

மிழகத்தில்  இன்றைய (11/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 29,272 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,38,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 16,171 பேர் உயிர் இழந்து 12,40,968 பேர் குணம் அடைந்து தற்போது 1,62,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,04,733 பேர் பாதிக்கப்பட்டு 5,368 பேர் உயிர் இழந்து 3,61,652 பேர் குணம் அடைந்து தற்போது 37,713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,02,126 பேர் பாதிக்கப்பட்டு 1,091 பேர் உயிர் இழந்து 87,997 பேர் குணம் அடைந்து தற்போது 13,038 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,00,546 பேர் பாதிக்கப்பட்டு 793 பேர் உயிர் இழந்து 85,429 பேர் குணம் அடைந்து தற்போது 14,324 பேர் சிகிச்சையில் உள்ளனர்.